மாருதி மானேசர் தொழிற்சாலையில் நடந்த கலவரம் குறித்து உழைக்கும் மக்களின் கருத்துகள்

நிரந்தரத் தொழிலாளர், ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை, ஸ்ரீபெரும்புதூர்
மாருதி தொழிலாளர்கள் இந்த மாதிரி ஒரு ஸ்டெப் எடுக்கணும்னா உள்ள என்ன என்ன நடந்திருக்கணும்? இங்க ஃபாக்ஸ்கான்ல கூட கடந்த ஒரு மாசத்தில 2 பேரை வீட்டுக்கு அனுப்பிச்சுட்டாங்க. ஒவ்வொரு நாளும் நாங்க வேலைக்கு போகும்போது நாளைக்கு வேலை இருக்குமாங்குற சந்தேகத்தோடதான் போறோம். திடீர்னு எங்க மேலே மேனேஜ்மன்ட் ரொம்ப காண்டா இருக்காங்க அப்ப நாங்க என்ன பண்றது? இந்த மாதிரி பண்ணனும்னா மாருதி தொழிலாளர்களுக்கு எவ்வளவு பிரச்சனை பண்ணீருக்கனும்? கவர்ன்மன்ட் முதலாளிகள் பக்கம் சாய்றாங்களே தவிர எங்க பிரச்சனையை கேட்க மாட்டேங்கிறாங்க. நாங்க வேலைக்கு போகனும்னா வெளியூருக்கு தான் போகனும் நாங்க வடக்குக்கு போய் வேலை பாக்கனும். வடக்கு ஆளுங்க இங்க வந்து வேலை பாக்கனும். மொத்தமா தொழிலாளர்களுக்கு எந்ந சப்போர்ட்டும் இருக்கக் கூடாது.

நிரந்தரத் தொழிலாளர், ஹுண்;டாய் தொழிற்சாலை
அந்த ஃபாக்டரியில் என்ன நடந்ததுன்னு தெரியலனாலும், எந்த ஒரு சூழ்நிலையில் இந்த மாதிரி ஒரு கலவரம் நடக்குங்குறது எங்களுக்கு புரியுது. இங்க வந்து பிளான்ட் அமைக்க அரசாங்கம் பன்னாட்டு நிறுவனங்களை அழைக்குது. ஆனா அவங்களோ எங்களை கொத்தடிமையா நடத்துறாங்க. நாங்க சொல்றத கேட்க வேண்டிய அரசாங்கம் எங்க பேச்சை புறக்கணிக்குது. ஆனா அவங்க சொல்படி கேட்டு எங்க மேலே பொய் கேஸ் போட்டு எங்களுக்கு அதுல இருந்து வெளிய வற்றதுக்கே வருஷக்கணக்காகுது. ஆனா முதலாளிங்களோ இன்ஷ்யூரன்ஸ் பணத்தினால எந்ந நஷ்டமில்லாம காப்பாத்திக்கிறாங்க. இங்க தொழிலாளர் துறை, தொழிலாளர் அமைச்சர்னு இருந்தும் எங்களுக்காக எதுவும் செய்யறதுல்ல. இவங்க முதலாளிகளை எந்த லேபர் பிரச்சனையையும் தீர்க்க  நிரப்பந்தம் செய்யறதுல்ல. எந்த ஃபாக்டரியையும் அங்க வேலை செய்ற தொழிலாளர்களின் நிலைமையை செக் பண்றதில்ல. இந்த மாதிரி சூழ்நிலையில தொழிலளார்கள் வெறுத்து போயிடுவாங்க. இப்படி அரசாங்கம் கண்டுகொள்ளாம இருந்தா, முதலாளிகள் என்ன வேணும் செய்யலாம் நிலைம இருந்தா, யூனியானாலயும் தொழிலாளர்களுடைய கோபத்தை கட்டுபடுத்த முடியாது.

நிரந்தரத் தொழிலாளர், ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை
தொழிலாளர்கள் இந்த மாதிரி ஒரு ஆக்ஷன் எடு;க்கனும்னா எப்படியல்லாம் டார்ச்சராயிருக்கனும்? எங்களுக்கு தொழிலாளர்கள் ஏன இப்படி ஒரு ஆக்ஷன் எடுத்தாங்கன்னு புரியுது ஏன்னா எங்களுக்கு இங்க ஒரே பிரச்சனை. நாங்க ஸ்ட்ரைக் பண்ணோம்கிற காரணத்துக்காகவே எங்களை ஜெயில போட்டாங்க. 16 தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்து இன்னைக்கும் வேலைக்கு சேத்துக்கவே இல்லை. நாங்க ஸ்ட்ரைக்ல இருந்து திரும்பி வர்றப்ப இனிமேல் இந்த மாதிரி ஸ்ட்ரைக் பண்ண மாட்டோம் எல்.பி.எஃப் யூனியன் சேருவோம்னு கேட்ல லெட்டர் எழுதி வாங்கீட்டாங்க. எங்க யூனியன் கொடியை வந்து கழட்டி எறிஞ்சுட்டாங்கனு நாங்க காவல்துறைகிட்ட கம்பிளெயின்ட் குடுத்தா அவங்க அதை வாங்காம எங்களையே ஜெயில்ல போடுவோம்னு மிரட்டுறாங்க. இந்த மாதிரி எங்க உரிமைகளை எல்லாமே பறிச்சாங்கனா நாங்க என்னதான் பண்றது?

நிரந்தரத் தொழிலாளர், ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை
தொழிலாளர்கள் பண்ணது தப்புதான். ஆனா மேனஜ்மன்ட் மேலயும் குறை சொல்லிதான் ஆகனும். முதலாளிகள் தொழிலாளர்கள் பிரச்சனையை கேட்டுருந்தாங்கன்னா இந்த மாதிரி ஆயிருக்காது. இந்த மாதிரி சூழ்நிலையை உருவாக்குனதுக்கு முதலாளிங்க பொறுப்பு எடுத்தாகனும்.

நிரந்தரத் தொழிலாளர், இன்பாக் டெல்டா
இந்த மாதிரி தொழிலாளர்கள் பிரச்சனைகள் உருவாக்குறதுக்கு காரணமே முதலாளிகள் தான். தொழிலாளர்களோட உழைப்புத் திறன் முதலாளிகளின் லாபத்துக்கு காரணமே. ஆனா ஒரு 12வது படிச்ச தொழிலாளரும் சரி படிக்காத தொழிலாளரும் சரி மாசம் சம்பளம் வாங்குறது 4500 ரூபாய். ஒரு குடும்பத்துக்கு துணை சம்பளமா இருந்த இது ஓகே. ஆனா அந்த தொழிலாளிக்கு ஒரு குடும்பம்னு வந்துட்டா எப்படி இது கட்டுபடியாகும். சில யூனியன்கள் இப்போ குறைந்த பட்ச சம்பளமா 10000 ரூபாய்னு கேட்டுகிட்டு இருக்காங்க. ஆனா இது சென்னை போல ஒரு சிட்டியில வாழ்றதுக்கு போதுமா? இன்னைக்கு நாம சுதந்திர தினம் கொண்டாடிட்டுருக்கோம். ஆனா தொழிலாளருக்கு எங்க சுதந்திரம்? நம்ம நாட்டுல ஜி.டி.பியும் ஏறிட்டுருக்கு ஏற்றத்தாழ்வும் ஏறிட்டுருக்கு.

This entry was posted in Art & Life, Working Class Vision, தமிழ். Bookmark the permalink.