உத்தர பிரதேச மாநிலத்தின் தாத்ரியில் நடந்த முஸ்லிம் தொழிலாளரை இந்து மதவாதக் கும்பல் படுகொலை செய்தது குறித்து தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பின்(IFTU) உண்மை அறிக்கை

இந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் விளைவாக அக்டோபர் 6 அன்று IFTU தேசிய குழுவின் உறுப்பினர் தோழர் ராதேஷ்யாமின் அலுவலகம் தீ வைக்கப்பட்டது. English version available at Sanhati.
நோய்டாவில் உள்ள டென்சோ இந்தியா லிமிடட் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தாத்ரியில் தங்கியுள்ளனர். செம்படம்பர் 29 அன்று சகத் தொழிலாளர் ஜன் மொகமதின் சகோதரரை ஒரு கும்பல் அடித்து கொன்றதாக அவர்களுக்கு தெரிய வந்தது. இறந்தவரின் மகனும் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தாக்குதல் நடந்த நாளன்று, தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பின்(IFTU) உறுப்பினர்கள், ஷ்ரமிக் சங்கத்தின் நிர்வாகப் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் குழு ஒன்று ஜன் மொகமத் மற்றும் அவர்களின் குடும்பத்தை சந்தித்தனர். அங்கு இந்த கொலைக்கான மதவாதத்தை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஜன் மொகமத் மற்றும் அவரது குடும்பத்தினர் காலங்காலமாக தாத்ரி கிராமத்தில் வாழ்கின்றனர். ஜன் மொகமத் டென்சோ இந்தியாவில் டெக்னீசியனாக பணிபுரிகிறார். கொல்லப்பட்ட அவருடைய சகோதரர் இக்லாக் அஹ்மத் கிராமத்தில் கொல்லராக பணி செய்தார். அவர்களுடைய மற்ற சகோதரர்கள் டெல்லி மற்றும் லோனியில் தொழிலாளர்களாக வாழ்ந்து வருகின்றனர். இக்லாக் அஹ்மதின் மூத்த மகன் இந்தியன் விமானப்படையில் சென்னையில் பணிபுரிகிறார். இக்லாக்கிற்கு ஒரு மகள் இருக்கிறார்.
தாத்ரி கிராமத்தில் சுமார் 2500 குடும்பங்கள் 9500 வாக்காளர்கள் உள்ளனர். இந்தப் பகுதியில் தாக்கூர் ஜாதியை சார்ந்த இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இங்கு சில தாழ்த்தப்பட்ட சாதி மக்களும் வாழ்கின்றனர். இங்கு வாழும் 32 முஸ்லிம் குடும்பங்களுக்கு சிறிது அப்பால், அஹ்மதும் மொகமதும் தங்கி இருந்தனர். கடும் உழைப்பினால் தங்களுடைய பிள்ளைகளை படிக்க வைத்து ஒரு நடுத்தர வாழ்க்கையை எட்டியுள்ளனர்.

இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஷ் ஷர்மா பிஜேபியை சார்ந்தவர். பிஜேபி கடந்த சிறுவாரங்களாக இப்பகுதியில் மதவாத செயல்களை செய்து வந்துள்ளது. பிஜேபியின் மத்திய உறுப்பினர்களுடன் இப்பகுதி இளைஞர்கள் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இந்து மதச் சின்னங்களுடன் உள்ள உடுப்புகளை அணிந்தும், மது அருந்தி அனைவiருக்கும் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன்னர், இங்குள்ள கோயிலில் ஒரு பூசாரி அமர்த்தப்பட்டுள்ளார்.

இவ்வாறான மதவாத சூழலில் செப்டம்பர் 25 அன்று பக்ரீத் பண்டிகையின் போது, தங்களுடைய வீட்டில் ஆடு பலிகடா கூட கொடுப்பதற்கு பயந்துள்ளனர். அஹ்மதின் மகள் அவருடைய வீட்டிலிருந்து ஆடுகறி கொடுத்தனுப்பி உள்ளார். அவருடைய குடும்பமும் அவர்களுக்கு பழக்கமான இதர சமூகத்தினரும் இதையே சமைத்து உண்டுள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று இரவு 8 மணி அளவில் ஒரு பாத்திரத்தில் மாட்டுக்கறியின் போட்டோ ஒன்று இந்த கிராமத்தில் காவல்துறையால் கைப்பற்றப்பட்டதாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதுவரை இந்த போட்டோ அல்லது செய்தி உண்மையானதா என்று எவரும் கூறவில்லை. இரவு 9 மணி அளவில் மூன்று நான்கு இளைஞர்கள் கோவிலுக்கு சென்று பூசாரியிடம், கிராமத்தில் ஒரு பசு செத்து கிடப்பதாகவும் பொது ஸ்பீக்கரின் மூலம் அனைவரையும் கூட்டுமாறு நிர்பந்தித்தாக பூசாரி கூறுகிறார்.

சுமார் 1500 பேர் உடனே கூடியதாகவும், அதில் 100 பேர், அஹ்மத் வீட்டு தெருக்குள் நுழைந்து, கேட்டை உடைத்து, சுவரைத் தாண்டி உள்ளே வந்து கோசமிட்டுள்ளனர். அவர்கள் வீட்டுக்குள்ளே நுழைந்து, அவருடைய அம்மாவை தாக்கயுள்ளனர். சிலர் மேல்மாடிக்கு சென்று அங்கு இருந்த அஹ்மதையும் அவருடைய இளைய மகன் தானிஷையும் கம்புகளால் தாக்கியுள்ளனர். அந்த அறையில் உள்ள எலெக்ட்ரிக் ரம்பத்தை கொண்டு அவர்களை படுகாயத்திற்கு ஆளாக்கியுள்ளனர். பின்னர், அஹ்மதின் உடலை வீதிவழியாக இழுத்து 150 யார்டிக்கு அப்பால் விட்டு சென்றுள்ளனர். அப்போது காவல்துறை அங்கு வந்துள்ளது. கொலைகாரர்களில் சுமார் பத்து பேரை இக்லாகின் மகள் அடையாளம் கண்டுள்ளார்.

IFTU தேசிய குழுவின் சார்பாக இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இது திட்டமிட்ட செயலாக நாங்கள் கருதுகிறோம். பிஜேபி பாராளுமன்ற பிரதிநிதி மகேஷ் ஷர்மா இது ஒரு தவறான புரிதல் என்று கூறியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. மக்களை எளிமையானவர்கள் என்று அரசும், ஆர.எஸ்.எஸ்சும் தப்பு கணக்கு போடுகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆதரவுகளையும் தெரிவி;த்து கொள்கிறோம். குடும்பத்தினருக்கு டென்சோ தொழிலாளர்களின் ஆதரவிற்கு வணக்கம் செலுத்துகிறோம். இவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு போராட மற்ற தொழிலாளர்களையும் வேண்டுகிறோம். உத்தர பிரதேச மாநில அரசு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து இதில் சம்பந்தபட்ட அரசியல் நோக்கங்களை வெளிப்படுத்துமாறு கோருகிறோம்.

காலங்காலமாக ஒன்றுகூடி வாழ்ந்து வரும் சமூகங்களை அரசியல் நோக்கங்களுக்காக பிN;ஜபியும் ஆர்.எஸ்.எஸ்சும் சீரழித்து வருகின்றனர். இந்த சக்திகளை தோற்கடிக்க தொழிலாளர் வர்க்கம் பாடுபட வேண்டும் என்று கோருகிறோம்.

IFTU தேசிய குழு

This entry was posted in Press Releases, Research Papers, Resources, Working class against communalism, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , , . Bookmark the permalink.